நீட் தேர்விற்கு விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்விற்கு விலக்குகோரி பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரியும், இதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும் காரைக்குடியில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி திராவிடமணி தலைமை தாங்கினார். மாவட்ட தி.க. செயலாளர் என்னாரசுபிராட்லா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் குணசேகரன்(தி.மு.க.), அரங்கசாமி(தி.க.), ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்டு), கந்தசாமி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வக்கீல் முருகானந்தம் (ம.தி.மு.க), சங்கு உதய குமார்(விடுதலை சிறுத்தைகள்), இல.மாறன், பெரியார்முத்து(தி.வி.க.), மாயன்ரமேஷ், நவுசாத்அலி, சிவாஜிகாந்தி, தமிழ்கார்த்தி, சிவஞானம், திருமுருகசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.