பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். முன்னதாக டவுன் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர்.
பெரம்பலூர்,
அங்கு முஸ்லிம்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத் தலைமை ஏற்று தொழுகையை நடத்தி வைத்தார். நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா, குர்-ஆனில் இருந்து குத்பாக்களை ஓதினார்.
இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், நாட்டாண்மை முனவர் ஷெரீப், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அல்லாபிச்சை, உலமாசபை மாவட்ட தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார்், சாகுல் அமீது, கூட்டுறவு வீட்டுவசதி சங்க துணைத்தலைவர் முகம்மது இக்பால், வக்கீல் முகமது இல்யாஸ் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து முஸ்லிம்கள் ஈகை அளித்து குர்பானிகொடுத்தனர். பின்பு டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் கட்டுமான கழகத்தின் மாவட்ட தலைவர் சுல்தான் இப்ராகீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லெப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர்,பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் ஜூம்மா பள்ளி வாசல் சார்பில் முத்தவள்ளி நூர்முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசல் களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

Related Tags :
Next Story