அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் குருபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூர்,
குருபெயர்ச்சியையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி கோவிலில் உள்ள நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தென்முக கடவுள் என்றழைக்கப்படும் குருபகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோவில் குருக்கள் ராமநாதன் வேதமந்திரங்களை கூறி பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார். அப்போது சிவனடியார்கள் தேவார திருபதிகங்களை பாடினர். நிகழ்ச்சியில் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோடாலிகருப்பூர் சொக்கநாதர் கோவில் மற்றும் நாயகனைப்பிரியால் சிவன் கோவில் ஆகிய கோவில்களிலும் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காமாட்சி உடனுறை வடகைலாயமுடைய நாயனார் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அரும்பாவூர், தழுதாலை, மேட்டூர், மழையாளப்பட்டி, பெரியமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் - விளந்தை அறம் வளர்த்த நாயகி உடனுறை மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக மேல அகத்தீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பிள்ளையார், முருகன், அகஸ்தியரை தொடர்ந்து நவக்கிரக குருபகவான் மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு மஞ்சள், பன்னீர், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆண்டிமடம், விளந்தை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத் திருந்து குருபகவானை வழிபட்டனர்.

Related Tags :
Next Story