‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உருவம் பொம்மை வைத்து, அதற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது போலீசார் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விட்டு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கூறியதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் சோழன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயாளர் மாறன், வடக்கு மாவட்ட நிதி செயலாளர் பரமேஷ்வரன், மாநகர தலைவர் குணசேகரன், மாநகர நிதி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் நேற்று குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜய், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ரவி, மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் மோகன பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், முதல்-அமைச்சர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story