‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம் தொல்.திருமாவளவன் - கி.வீரமணி பேட்டி
‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று தொல்.திருமாவளவன்-கி.வீரமணி ஆகியோர் கூறினர்.
செந்துறை,
மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வினால் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கிற வாய்ப்பை அனிதா இழந்திருக்கிறார். டாக்டராகும் எதிர்கால கனவை நொறுக்கி விட்டது. எனவே அனிதாவின் இந்த முடிவு விரக்தியால் ஏற்பட்ட தற்கொலை அல்ல. ஆத்திரத்தால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டம். மத்திய-மாநில அரசுகளின் துரோகத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் அனிதா. அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாய்வு செய்து நீட் தேர்வை ரத்து செய்யும் வரையில் போராடுவது குறித்து முடிவு செய்வோம். தி.மு.க., திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து போராடுவோம்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை பரிசீலித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என போலி நம்பிக்கையை தந்தார். உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசின் வழக்கறிஞர் ஓராண்டு விலக்கு அளிக்க சிந்திப்பதாக கூறி, பின்னர் அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டனர். மத்திய அரசு நயவஞ்சக அரசாகவும், மாநில அரசு செயலிழந்த அரசாகவும் இருந்தது தெரிகிறது. இதன் விளைவு தான் அனிதாவின் மரணத்திற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு போராட்டத்திற்கு உறுதியேற்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அடுத்து கிடத்தப்பட வேண்டிய சவம் நீட் தேர்வுதான். மாறாக மாணவர்கள் இல்லை. தமிழக மக்களின் பிள்ளையான அனிதாவை மீட்க முடியாது. மத்திய அரசு நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளது. அதற்கு கத்தியாக தமிழக அரசை பயன்படுத்தியிருக்கிறது. எனினும் நாம் இழந்த உரிமையை மீட்க வேண்டும். சாதி, மத பேதங்களை கடந்து மருத்துவ கல்வியை சிதைக்கின்ற முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நீட் தேர்வுக்கு முடிவு கட்டாவிட்டால் ஆட்சிக்கும் முடிவு மக்கள் கட்டும் நேரம் நெருங்கி விட்டது என்பதை மறந்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு நிருபர்களிடம் கூறும்போது, “நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிப்பதாக மத்திய-மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதே போன்று மாணவி அனிதாவும் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என நம்பியிருந்தார். மத்திய-மாநில அரசுகள் ஏமாற்றத்துக்கு தள்ளிவிட்டது. அந்த விரக்தியில் மரணத்தை தேடிக்கொண்டார். எனவே நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று கூறினார்.

Related Tags :
Next Story