‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கவேண்டும்
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பிறகாவது ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கவேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமி அந்த பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அவரின் செயல்பாட்டின் உதாரணம் தான் அரியலூரில் நடந்த அனிதாவின் மரணம். ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. அவர் உருவாக்கிய கட்சியை அழிக்கும் விதமாக பதவியில் இருந்தால் போதும் என்று தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருவர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தமிழகத்தை மட்டும் அல்ல உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராளிகளாக அங்கு தங்கியிருக்கிறார்கள். இதற்கு கவர்னர் ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும். உட்கட்சி பிரச்சினை என்று அவர் இதில் காலம் தாழ்த்தக்கூடாது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
எங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் அரசாங்கம். நாங்கள் முதல்-அமைச்சரை மாற்றவேண்டும் என்ற முயற்சியில் போராடிவருகிறோம். நிச்சயம் இதில் வெற்றிபெறுவோம். எங்களை பொறுத்தவரை இந்த இயக்கமும், தமிழகத்தின் நலன் மட்டும் தான் முக்கியம்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தில், குறிப்பாக ஏழை, எளிய மாணவர்களின் கனவு தவிடுபொடியாகிவிட்டது. அதற்கு உதாரணம் தான் அரியலூர் மாணவி அனிதாவின் துர்மரணம்.
இனியாவது மத்திய அரசு தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும். தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்தாருக்கு நிதி வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story