துறையூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது
துறையூர் அருகே பழ மலையில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
துறையூர்,
திருச்சி மண்டல வன அலுவலர் திருநாவுக்கரசு வழிகாட்டுதலின் படி திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின்படி, துறையூர் வன சரகர் குணசேகரன் தலைமையில் வனக்காப்பாளர் கருணாநிதி உள்ளிட்ட வனக்குழுவினர் பழமலை வனக் காப்புக் காட்டில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை செங்காட்டுப்பட்டி மூலக்காடு பிரிவு சாலை பகுதியில் உள்ள பழமலை வனக்காப்பு பகுதியில் இருந்த 2 பேர் வனத்துறையினரை கண்டவுடன் தப்பி செல்ல முயன்றனர்.
உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர், அவர்களை பிடித்து விசாரித்த போது பெரியபழமலையைச் சேர்ந்த சுந்தராஜ் மகன் சத்யராஜ்(வயது 28), பெரிய இலுப்பூரைச் சேர்ந்த செல்வகுமார்(38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கிக்கு அரசின் உரிமம் இல்லை என்பதும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட அந்தப் பகுதியில் திரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story