2018-19-ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 800 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும்
2018-19-ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 800 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் அனில் டி.சகாஷ்ரபுதே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தலைவர் (ஏ.ஐ.சி.டி.இ) அனில் டி.சகாஷ்ரபுதே கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
800 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும்
நாடு முழுவதும் 10 ஆயிரத்து 363 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. குறிப்பிட்ட சில கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவ, மாணவிகளே சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் 2018-19-ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 800 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும். இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விரிவான விவாதம் நடத்தியதற்கு பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் சேருகிறார்கள், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள், ஆசிரியர்களின் தகுதி, அவர்களது கற்பிக்கும் திறமை உள்பட அனைத்து புள்ளி விவரங்களையும் சேகரித்து, அதன் அடிப்படையிலேயே நாடு முழுவதும் உள்ள 800 என்ஜினீயரிங் கல்லூரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்களின் நலன் பாதிக்காமல்...
இவ்வாறு மூடப்படும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், அதற்கு அருகில் உள்ள மற்ற கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் மட்டும் 2017-18-ம் கல்வி ஆண்டில் 29 ஆயிரம் என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்ததாக கர்நாடக தொழில்நுட்ப கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.
அந்த கல்லூரிகளை மூட முடிவு எடுத்திருக்கும் நிலையில், மேலும் புதிதாக என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்திற்கு ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. அதுகுறித்து உரிய பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும். 800 கல்லூரிகளை மூடும் பட்சத்தில் மாணவர்களின் நலன் பாதிக்காமல் இருக்க, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story