பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
புதுக்கோட்டை,
பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறுவர், சிறுமிகள் கைக்குலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதைபோல புதுக்கோட்டை தெற்கு 2,3-ம் வீதிகளில் உள்ள பெரியபள்ளி வாசல், அண்டக்குளம், கலீப்நகர், மச்சுவாடி, திருவப்பூர், மீன்மார்க்கெட் அருகே, பூங்காநகர் உள்பட நகரில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
திருவரங்குளத்தில் உள்ள பள்ளிவாசல், கைக்குறிச்சி, மழவராயன்பட்டி, வல்லத்திராக்கோட்டை, குளவாய்ப்பட்டி, முத்துப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கைக் கொடுத்தும், கட்டித்தழுவியும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மேலும் நார்த்தாமலை, காவேரிநகர், பாலாநகர், இலுப்பூர், அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கோட்டைப்பட்டினம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story