சேலத்தில் சாலை மறியல்; 130 பேர் கைது வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்
இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர். வாயில் கருப்புத்துணி கட்டி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை எதிரொலியாக சேலத்தில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர். வாயில் கருப்புத்துணி கட்டி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சேலம் மாநகரில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளருமான தமிழரசன் தலைமை தாங்கினார். மாணவர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர் ஜெகதீசன், நுகர்வோர் குரல் அமைப்பாளர் பூபதி, சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, உமாராணி செல்வராஜ், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தெய்வலிங்கம், அருள்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சமூக நீதியை அழிக்கும் ‘நீட்’ தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு எதிரான முடிவை எடுத்த பிரதமர் மோடியை கண்டிப்பதாகவும், அதற்கு துணைபோன தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வெங்கடேஷ், செயலாளர் ரமேஷ், மாணவர் பெருமன்ற தலைவர் மாதவன், செயலாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 30 பேரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். சிலர் ரோட்டில் படுத்து உருண்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாயில் கருப்புதுணி கட்டியும், மோடி படத்தை கையில் ஏந்தியும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். போராட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் தலைமை தாங்கினார். சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர் யுவராஜ், ஓமலூர் பொறுப்பாளர் மோகன்ராஜ், சங்ககிரி அய்யப்பன், காடையாம்பட்டி சேட்டு, மாணவரணி செயலாளர்கள் கவியரசன், மணிகண்டன், தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் அண்ணா பூங்காவில் இருந்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் சிலர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், மோடி உருவ முகமூடியை அணிந்தும் சென்றனர். பெரியார் மேம்பாலத்தின் மையப்பகுதிக்கு சென்றதும் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தொண்டரணி மாநில நிர்வாகி இமயவரம்பன், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் காஜாமைதீன், வேலுநாயக்கர், மாநில துணை செயலாளர்கள் பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவி அனிதா மரணத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கையில் தூக்கு கயிறுடனும், முகத்தில் பிரதமர் மோடி உருவ முகமூடியை அணிந்தும் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கமிஷனர் செல்வராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். சாலையில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story