சேலம் அருகே திடீர் ஆய்வு: போலி டாக்டரை கையும், களவுமாக பிடித்த கலெக்டர் ரோகிணி
சேலம் அருகே மகுடஞ்சாவடியில் கலெக்டர் ரோகிணி நடத்திய திடீர் ஆய்வின் போது போலி டாக்டரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ‘டெங்கு‘ காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை கலெக்டர் ரோகிணி வழங்கி வருகிறார்.
இளம்பிள்ளை அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் கிராமத்தில் நேற்று கலெக்டர் ரோகிணி, டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி முறையான கால அளவில் சுத்தம் செய்யப்படாமலும், குடிநீர் குளோரினேசன் செய்யப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் தெருக்களில் குடிநீருக்காக வைக்கப்பட்டு உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் மூடி இல்லாத நிலையில் ‘ஏடிஸ்‘ கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, டெங்கு தடுப்பு பணியில் மெத்தன போக்கை கடைபிடித்து வந்ததாக கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி செயலாளர் செந்திலை உடனடியாக இடமாற்றம் செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.
மேலும், மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் கடமையை சரிவர செய்யாமல் மெத்தனம் காட்டும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். டெங்கு ஒழிப்பு பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக செயல்படும் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என்றார்.
ஆய்வு பணியின்போது மகுடஞ்சாவடிக்கு கலெக்டர் ரோகிணி வந்தார். அங்கு பஸ் நிறுத்தம் அருகில் ‘சுகம் மெடிக்கல் ஸ்டோர்‘ என்ற பெயரில் மருந்து கடை இருந்தது. அந்த கடைக்குள் திடீரென கலெக்டர் ரோகிணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி ஆகியோர் புகுந்து ஆய்வு நடத்தினர்.
அப்போது கடையில் வேலை பார்க்கும் 10-ம் வகுப்பு வரை படித்துள்ள கார்த்திகேயன்(வயது32) என்பவர் இருந்தார். மருந்து கடையின் உள்ளே ‘கிளினிக்‘ அமைத்து, அதில் படுக்கை ஒன்றும் போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அவரிடம் விசாரித்தபோது, கன்னந்தேரியை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பவர் கடை உரிமையாளர் என்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. அந்த வேளையில் பாஸ்கர் அங்கு இல்லை. பாஸ்கர், “பி.எச்.எம்.எஸ்.“ என்னும் ஓமியோபதி மருத்துவம் படித்தவர் என்பதும், எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் போல அலோபதி மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு ஊசி மருந்து போட்டு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. மேலும் கார்த்திகேயனும் போலி டாக்டர் போல நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.
இதையடுத்து கார்த்திகேயன் போலி டாக்டர் என்பதை உறுதி செய்த கலெக்டர் ரோகிணி, அவர் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்திய அறையில் உள்ள மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் உதவியுடன் பறிமுதல் செய்தார்.
அத்துடன் மருந்து கடைக்கும் கலெக்டர் ரோகிணியே பூட்டு போட்டு ‘சீல்‘ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க சங்ககிரி உதவி கலெக்டர் ராம.துரைமுருகனுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மருந்துகடை உரிமையாளர் பாஸ்கர், கார்த்திகேயன் ஆகியோர் மீது மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட கார்த்திகேயனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாஸ்கரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story