சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,

சிறுமி கற்பழிப்பு
மும்பையை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி நோட்டுப்புத்தகம் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தாள். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
அவர் சிறுமியிடம் நடிகர் ஒருவரை நேரில் காண்பிப்பதாக கூறி தன்னுடன் பஸ்சில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடத்திற்குள் சிறுமியை தூக்கி சென்று கற்பழித்து விட்டு ஓடி விட்டார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமியை கடத்தி கற்பழித்தவர் பெயர் ரவீந்திர போசலே (வயது31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது குற்றவாளி ரவீந்திர போசலேவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story