நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.97½ லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.97½ லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரம்பூர், திண்டமங்கலம், பெரியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் தொடக்கமாக கீரம்பூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடப்பணியினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இதே ஊராட்சியில் வேட்டுவம்பாளையம் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும், பெரியகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் பல்வேறு ஊராட்சிகளில் தனிநபர் இல்ல கழிப்பிடம் கட்டும் பணி உள்பட நாமக்கல்் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.97 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2016-17, 2017-18-ம் நிதியாண்டுகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் ரூ.9 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 1,767 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 987 பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 780 பணிகள் நடைபெற்று வருவதாகவும், அனைத்து பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள்ளும் முடித்திட வேண்டும் எனவும் கலெக்டர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ரமணி, உதவி பொறியாளர் நைனாமலைராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனியவன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் குமார், கீதா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story