மாவட்டம் முழுவதும், குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
குருபெயர்ச்சியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்,
குருபகவான் நேற்று காலை கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி நாமக்கல் - திருச்சி ரோட்டில் மாருதி நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குரு பெயர்ச்சி சிறப்பு யாகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 7.30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும், 8 மணிக்கு மேல் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு குருபகவானுக்கு 108 சங்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலிலும் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. முருகரும் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள விநாயகர் கோவில், தட்டார தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் என பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் ராசிபுரம் ஸ்ரீசரணாலய ஆசிரம, ஸ்ரீநவக்கிரக பக்தர்கள் குழுவின் சார்பில் 39-ம் ஆண்டு குரு பெயர்ச்சி விழா நடந்தது. விழா நிகழ்ச்சிகளை சரணாலய ஆசிரம செயலாளர் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி நேற்று காலை நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கும் மற்ற நவக்கிரக பகவான்களுக்கும் 108 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நவக்கிரகங்களுக்கும், குரு பகவானுக்கும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வாசனாதி திரவியங்கள் பூசி, வஸ்திரங்கள் அணிவித்து பக்தர்களால் கூட்டு பிரார்த்தனை, குரு பெயர்ச்சி விளக்க வழிபாடு ஆகியவை நடந்தது. காலை 9.31 மணிக்கு நவக்கிரகங்களுக்கும், நவக்கிரக குரு பகவானுக்கும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள 60 சாமி சன்னதிகளிலும் பக்தர்களால் 1,008 விளக்குகள் ஏற்றப்பட்டு உலகநல வழிபாடு, சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. குரு பெயர்ச்சி விழாவில் தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், இ.கே.பொன்னுசாமி, வக்கீல் தாமோதரன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சரவணன் உள்பட ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராசிபுரம் டவுன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை வேதபாராயணம், விக்னேஷ்வரர் பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, 9 கிரகங்களுக்கும் அபிஷேகம், கலச அபிஷேகம் நடந்தது. நவக்கிரக குருபகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த குருபெயர்ச்சி விழாவில் விஜயகுமார சிவசாமி கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றி, குருபெயர்ச்சி விழாவை நடத்தி வைத்தார். விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சங்கமேஸ்வரர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் ராசிபுரம் சுவாமி சிவானந்தசாலை இ.பி.காலனியில் உள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ராசிபுரம் அருகேயுள்ள மூணுசாவடி ஆவுடையார் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி நவக்கிரகங்களில் உள்ள குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள், யாகம் நடந்தது. இந்த குரு பெயர்ச்சி விழாவில் மூணுசாவடி, பாச்சல், புதுச்சத்திரம் உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவான் தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர். பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், பரமத்தி வேலூர் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் விரட்டீஸ்வர் கோவில்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சி விழா நடந்தது.
விழாவையொட்டி காலை சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செண்பகமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள செண்பக ஈஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி யாகம், ஹோம வழிபாடு மற்றும் பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலையில் விநாயகர், நவக்கிரக வழிபாடும், குரு பெயர்ச்சி சிறப்பு யாகமும், பகலில் குருபரிகார பூஜையும், குருபகவானுக்கு 540 வலம்புரி சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. யாகபூஜையினை பண்ணை கிணத்தூர் பரமேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் முன்னின்று செய்தனர்.
இதில் மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, செண்பகமாதேவி, காளிப்பட்டி, மங்களம், பள்ளக்குழி, நல்லாக்கவுண்டம்பாளையம், சங்ககிரி, கை-புதூர், செம்பாம்பாளையம், சூரியகவுண்டம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ராஜகோபால் மற்றும் கோவில் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல குருபெயர்ச்சியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story