மருத்துவமனை விடுதியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை


மருத்துவமனை விடுதியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Sept 2017 4:31 AM IST (Updated: 3 Sept 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

பெடர்ரோட்டில் உள்ள மருத்துவமனை விடுதியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

பெடர்ரோட்டில் உள்ள மருத்துவமனை விடுதியில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நர்சு

மும்பை பெடர்ரோடு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாராயணி அவஸ்தி (வயது24) என்ற பெண் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவர் அங்குள்ள மருத்துவமனை விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை குளிப்பதற்காக சென்றார்.

ஆனால் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மற்ற நர்சுகள் குளியலறை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் நாராயணி அவஸ்தி கதவை திறக்கவில்லை. சத்தமும் கொடுக்கவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு நாராயணி அவஸ்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து பதறி போன அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த காம்தேவி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாராயணி அவஸ்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இருப்பினும் அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story