மாணவி அனிதா தற்கொலை: ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 29 பேர் கைது
மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவிலிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நேற்று காலை குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கூடினார்கள்.
அவர்கள் தங்களது கைகளில் “மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம், உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்காதே“ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்தபடி நின்று, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு உருவாகியது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்ணபாஸ், கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், “அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது“ என்று கூறினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.
இதைக்கண்டித்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோல் மாணவி அனிதா சாவுக்கு நீதி வேண்டும், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று மதியம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் போராட்டம் நடந்தது. அப்போது தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் தினகரன் தலைமையில், நிர்வாகிகள் ஜெயசிங், அருளானந்தம், ராம்தாஸ், ஜனார்த்தனன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில்- நெல்லை சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து, விரைந்து வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தினகரன் உள்பட 12 பேரையும் கைது செய்தனர். அவர்களையும் போலீசார் வாகனத்தில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர். 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வால் பலிவாங்கப்பட்ட ஏழை மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிஸ்கின் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் ரெஜீஸ்குமார், மாதர் சங்க மாநில செயலாளர் உஷாபாசி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாதர் சங்க நிர்வாகிகள் ரகுபதி, மேரி ஸ்டெல்லாபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி அனிதாவின் உருவப்படம் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனரையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் பிடித்திருந்தனர். இதேபோல் அருமனை மற்றும் சுவாமியார்மடம் ஆகிய பகுதிகளில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (விடுதலை) சார்பில் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அனிதாவின் உருவப் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story