திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
திருச்செந்தூர்,
குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நேற்று காலையில் பெயர்ச்சியானார். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
குருப்பெயர்ச்சி விழா கமிட்டி சார்பில் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், முன்னாள் நகரசபை துணை தலைவர் ராமர், தொழில் அதிபர் நடராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story