மீண்டும் டெங்கு ஆபத்து
நவீன உபகரணங்கள், தரமான சிகிச்சைகள், வீரியமான மருந்துகள், அரிய கண்டுபிடிப்புகள் என உலக மருத்துவத்துறை இன்று மிகப்பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
நவீன உபகரணங்கள், தரமான சிகிச்சைகள், வீரியமான மருந்துகள், அரிய கண்டுபிடிப்புகள் என உலக மருத்துவத்துறை இன்று மிகப்பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு தேங்கி விடாமல் புதிய மருத்துவ முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான தேடல்களும் நாளுக்கு நாள் தொடர்கிறது.
மருத்துவத்துறையின் இந்த அபரிமித வளர்ச்சியால் பல கொடிய நோய்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, தொற்று நோய்களால் நிகழும் கொத்து கொத்தான மரணங்கள் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் மொத்த ஊரையே காவு வாங்கிய காலரா, பெரியம்மை, தட்டம்மை போன்ற கொடிய நோய்கள் இன்று சாதாரண நோய்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
உயிர்க்கொல்லி நோய்கள் பலவற்றுக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் அவற்றால் நிகழும் மரணம் தள்ளி போடப்பட்டு வருகிறது. புற்றுநோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களுக்கும் இன்று மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இருக்கின்றன.
இப்படி சிறந்த மருத்துவம் அளிப்பதில் இந்திய மருத்துவ துறையும் முன்னணியில்தான் உள்ளது. நோய்களை கண்டறிந்து சிறப்பு மிக்க சிகிச்சை அளிப்பதில் நாம், உலகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையை எட்டியிருக்கிறோம்.
பல நாட்டினருக்கு மருத்துவ தலை நகராகவே இந்தியா மாறியிருக்கிறது என்றால் மிகையல்ல. பாகிஸ்தான், இலங்கை, ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக இந்திய பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளை மொய்த்து வருவதை வைத்தே இதை கணிக்க முடியும்.
இப்படி மருத்துவத்துறையின் வளர்ச்சியும், நவீனமும் ஒருபுறம் கொடிகட்டி பறந்தாலும் சில கொடிய நோய்கள் அவ்வப்போது இந்த நவீனத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கத்தான் செய்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் தோன்றி மறையும் பருவகால நோய்களானாலும் சரி, ஆதி முதலே மக்களை வாட்டி வதைத்து வரும் நீண்டகால வியாதிகள் என்றாலும் சரி, சில நேரங்களில் உலகளாவிய வல்லுனர்களின் திறமைக்கு சவால் விடுகிறது.
அப்படி மருத்துவத்துறைக்கு பெரும் சவாலாக திகழ்ந்து வரும் நோய்களில் டெங்கு காய்ச்சல் முக்கியமானது. ‘ஏடிஸ்’ எனப்படும் ஒருவகை கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் காய்ச்சல் இதுவரை பலிகொண்ட உயிர்கள் ஏராளம். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்காததில் இருந்தே இதன் வீரியம் தெரியவருகிறது.
உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது பரவி வந்த இந்த டெங்கு காய்ச்சல் தற்போது குறிப்பிட்ட காலம் என்ற வரையறையின்றி எப்போதும் பரவுகிறது. சாதாரண காய்ச்சல், தலைவலி போல எப்போதும் மனிதர்களை தாக்குகிறது. அதுமட்டுமின்றி அடுத்திருப்பவருக்கும் பரவி உயிர்களை வாங்கி விடுகிறது.
பருவ கால நோயாக இருந்த டெங்கு, எப்போதும் பரவும் நோயாக மாறியதற்கு உலக பருவநிலை மாற்றமே காரணம் என கூறப்படுகிறது. மாறி வரும் பருவ நிலையால் இயற்கை பேரழிவுகள் மட்டுமின்றி இதுபோன்ற நோய்களும் மனிதர்களுக்கு எமனாக மாறி வருகிறது.
இவ்வாறு டெங்கு பாதிப்பை எப்போதும் உணரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் டெங்கு பாதித்தவர்களின் புள்ளி விவரங்களை எடுத்துப்பார்த்தால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணிசமான உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
அப்படிப்பட்ட இந்த கொடிய நோய் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மீண்டும் பரவி வருகிறது என்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆகஸ்டு மாத நிலவரப்படி சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன.
‘டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு எலும்பு முறிக்காய்ச்சல் என பொருள். ‘பிளாவிவைரஸ்’ பேரினத்தை சேர்ந்த ஒருவகை வைரசால் ஏற்படும் இந்த நோய் கொசுக்களால் பரப்பப்படுகிறது. ‘ஏடிஸ் ஏஜிப்டி’, ‘ஏடிஸ் அல்போடிக்டஸ்’ என்ற இரண்டு வகை கொசுக்கள் இந்நோய் கிருமிகளை சுமந்து கொண்டு நலத்துடன் இருப்பவர்களை கடிக்கும் போது நோய் தொற்றிவிடுகிறது.
இந்த கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாட்களுள் நோய் ஏற்படும். ஏடிஸ் கொசுக்கள் கருப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளி நிறப் புள்ளிகள் தென்படும். மற்ற கொசு வகையுடன் (மலேரியா, யானைக்கால் நோய் பரப்பிகள்) ஒப்பிடுகையில் தோற்றத்தில் சிறியவை. முதுகில் 2 வெள்ளி நிறக்கோடுகள் தெரியும். பெண் கொசுக்கள் தான் நோயை பரப்புகின்றன.
காலையில் சூரிய உதயத்துக்குப்பின் 2 முதல் 3 மணி நேரங்களுக்குள் அல்லது மாலையில் சூரியன் மறைவதற்கு முன் 2 முதல் 3 மணி நேரங்களுக்குள் இந்த கொசுக்கள் கடிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இப்படி பகலில்தான் அதிகமாக இந்த கொசுக்கள் கடிப்பதாக கண்டறியப்பட்டாலும் சில வேளைகளில் எல்லா நேரங்களிலும் கடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவும் இந்த வைரஸ், டெங்கு-1, 2, 3 மற்றும் 4 என நான்கு வகைகளில் உள்ளது. இதில் 2 மற்றும் 4-ம் நிலை வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த நோய் அனைத்து பிரிவினரையும் தாக்கினாலும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
டெங்கு காய்ச்சலை, அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை, ஆரம்பகட்ட டெங்கு நிலை, ரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நிலை, டெங்கு அதிர்ச்சி நிலை என 4 கட்டங்களாக பிரிக்கலாம். இந்த நிலைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்.
ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் ஓரிரு நாட்களில் குறையாவிடின் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றால், அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதில் இருந்து தடுக்கலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைகளுக்கு செல்வதால் அதிகமானோர் சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இறந்து விடுகின்றனர்.
சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. வெறும் ஒரு வைரஸ் காய்ச்சல் என்ற நிலையிலேயே இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் இதை சாதாரண ரீதியில் குணப்படுத்தவும் முடியும்.
ஆனால் டெங்கு ரத்தப்போக்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானது. ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுகள் எண்ணிக்கை குறைதல், கடுமையான வயிற்று வலி, சுவாசக்கோளாறு, ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளால் உட்புற உறுப்புகளை செயலிழக்கச்செய்து மரணத்தை வரவழைக்கும். எனவே டெங்கு அறிகுறிகள் தோன்றிய உடனேயே மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த நோய்க்கு என தனிப்பட்ட சிகிச்சை அல்லது மருந்துகள் இல்லை என்றே மருத்துவ உலகம் கூறுகிறது. எனினும் தீவிர நிலைக்கு தள்ளப்படும்முன் டெங்கு காய்ச்சலை கண்டுபிடித்துவிட்டால் அதை குணப்படுத்த முடியும்.
தொடக்க நிலையில் சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும் ‘பாராசிட்டமால்’ போன்ற மாத்திரைகள் மட்டுமே டெங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். (ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது)
அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரஞ்சு, பழஜூஸ், இளநீர் போன்ற நீராகாரங்களை அதிகமாக உட்கொண்டு, தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரத்த வெள்ளை அணு மற்றும் தட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சிக்கலான ரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நிலைக்கு செல்லும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்குவதுடன், ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அளவு குறைந்திருந்தால் ரத்தமோ அல்லது ரத்த தட்டுக்கள் நிறைந்த ஊனீரோ (பிளாஸ்மா) ஏற்றப்படும்.
ஏனெனில் ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை 20,000-க்கு கீழ் குறையும் போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுதல் மிகவும் கடினம்.
இப்படி உயிர்க்கொல்லி டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை முறைகள் குறைவாக இருப்பதால் அதை வருமுன் காப்பதே சிறந்தது. குறிப்பாக ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதலே அதற்கான சிறந்த வழிமுறையாகும். இந்த கொசுக்கள் நன்னீரில்தான் முட்டை போட்டு இனப்பெருக்கம் செய்வதாக கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே வீடுகள் மற்றும் குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக வாளிகள், குளிரூட்டிகள், வீட்டினுள்ளே வைத்திருக்கும் செடி தொட்டிகள் என எதிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
அத்துடன் வீடுகளில் கொசு விரட்டிகள் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடலை முற்றிலும் மறைக்கும் துணிகளை உடுத்திக்கொண்டு கொசுக்கடியில் இருந்து விடுபட்டாலே டெங்குவில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் தினமும் நிகழும் அரசியல் மாற்றங்களால் மாநிலம் முழுவதும் பரவி வரும் இந்த நோய் பாதிப்பு வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் தலையாய கடமையாகும்.
இவ்வாறு நோயை தடுப்பதற்கான வழிகளை எடுப்பதுடன், இந்த நோயில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதும் அவசியம். அரசின் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டெங்குவை முற்றிலும் ஒழிக்க முடியும். இதற்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து டெங்கு இல்லா தமிழகம் உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
* 24 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல் மாத்திரைகளோ, நோய் எதிர்ப்பு மருந்துகளோ வீட்டிலேயே எடுத்துக் கொள்ளக் கூடாது.
* சிக்குன் குனியா காய்ச்சலும் ஏடிஸ் கொசுக்களால்தான் பரவுகிறது. இந்த நோயால் மூட்டுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் பொதுவாக உயிருக்கு ஆபத்தில்லை.
* காய்ச்சல், தலைவலி, சோர்வு என 3 நோய்களுக்கும் (டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா) ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தாலும், டெங்கு காய்ச்சலுக்கு ரத்த வெள்ளை அணுக்கள், தட்டுகள் குறைதல் மற்றும் சில நேரங்களில் உட்புற ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளும் இருக்கும்.
* வைரஸ் காய்ச்சலுக்கு 104 டிகிரி வரை காய்ச்சல் அடிப்பது இயல்பு. இயல்பான ரத்த அழுத்தத்துடன், அதேநேரம் வாந்தி இல்லை என்றால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தேவையில்லை.
* அதிகமான சோர்வு, தலைச்சுற்றல், தொடர் வாந்தி, உடலில் எந்த பாகத்திலும் ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆபத்தானது. எனவே நோயாளிகள் மருத்துவரை நாட வேண்டும்.
* டெங்கு அறிகுறிகள் இருந்தால் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கவனித்து வருதல் அவசியம்.
* ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் மீண்டும் இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும்.
* கொசு உற்பத்தியில் இருந்து வீட்டையும், சுற்றுப்புறத்தையும் காத்தல், கொசு வலைகள் பயன்படுத்துதல், குடிநீர் தொட்டிகளை மூடி வைத்தல், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
டெங்கு அறிகுறிகள்
திடீரென ஏற்பட்ட கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, கண்களின் பின்புறத்தில் வலி, உடல்வலி, மூட்டுகள், தசைகள், கை, கால், எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளை கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறி காணப்படல், பசியின்மை போன்றவை ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.
உடல் குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, சுவாசக்கோளாறு, அதிகரிக்கும் நாடித்துடிப்பு, திடீரென காய்ச்சல் குறைதல், உறுப்புகளில் ரத்த கசிவு, ரத்த வாந்தி, கருப்பு நிற மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடல், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மற்றும் சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு அதிர்ச்சி நிலையின் அறிகுறிகள் ஆகும்.
ஆயுர்வேதம் சொல்வது என்ன?
* உடலில் வாதம், பித்தம் பாதிப்புக்கு உள்ளாகும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. வாதம் முற்றுவதால் மூட்டுகளில் வலியும், பித்தம் முற்றுவதால் ரத்தக்கசிவும் ஏற்படுகிறது.
* வாதம் முற்றுவதை தடுக்கும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். எனவே நோய்க்கான சிகிச்சையுடன் பூரண ஓய்வும் அவசியம்.
* குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், கொசுக்களால் நோய் பரவுவதை தடுப்பதற்காகவும் நோயாளிகள் உடல் முழுவதும் போர்வையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
* பருப்பு அல்லது காய்கறி சூப், கஞ்சி போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* வறுத்த, காரமான, புளிப்பான உணவுகள் மற்றும் வெள்ளை நிற மாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரைப்பையில் ஒருவித நச்சை உருவாக்குவதால் காய்ச்சலுக்கான சூழல் அதிகரிக்கிறது.
* உடலில் நீர் அளவை சீராக வைப்பதற்காக போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலை ஜூஸ் அடிக்கடி குடிக்க வேண்டும்.
* முழுமையாக குளிப்பதற்கு பதிலாக வெந்நீரில் நனைத்த துணியால் உடலை துடைத்தல் நலம்.

Related Tags :
Next Story