கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2017 4:15 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அண்ணா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று நடந்தது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், ஓசூர் தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் சிவராமன், தர்மபுரி மண்டல செயலாளர் தகடூர் இளமாறன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு அளித்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிரந்தர விலக்கை பெற்று தர வேண்டும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் சரவணன், கவின்குமார், விசுவநாதன், சுரேஷ்குமார் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story