ஓடும் காரில் நாகப்பாம்பு ஈரோட்டில் பரபரப்பு


ஓடும் காரில் நாகப்பாம்பு ஈரோட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sept 2017 4:45 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

கரூர், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி.

ஈரோடு,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 60). இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருடைய உறவினர் மரணத்துக்காக ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதிக்கு நேற்று வந்தார்.

பின்னர் இறந்தவரின் இறுதி சடங்குக்காக உடல் ஈரோடு காவிரிக்கரை ஆத்மா மின்மயானத்துக்கு அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டது. பின்னால் தங்கவேலுவும் வேறு உறவினர்கள் 3 பேரும் ஒரு காரில் பின்தொடர்ந்து வந்தனர். தங்கவேலு காரை ஓட்டிக்கொண்டு வந்தார். கார் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின் இருக்கையில் இருந்தவர்கள் காரை நிறத்தும்படி அலறினார்கள். என்னவோ, ஏதோ என்று அதிர்ந்துபோன தங்கவேல் காரை ஓரம் கட்டி நிறுத்தினார். அதற்குள் காரின் பின் சீட்டில் இருந்தவர்கள் கதவுகளை திறந்து விட்டு வேகமாக வெளியே குதித்தனர்.

ஓடும் காரில் இருந்து அவசர அவசரமாக அவர்கள் வெளியேறிதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் காரின் பின் சீட்டுக்கு கீழே கால்கள் வைக்கும் பகுதியில் ஏதோ நெளிகிறது என்றார்கள். உடனடியாக அங்கு கிடந்த விரிப்பினை(மேட்) எடுத்து வெளியே போட்டனர். அப்போது அங்கு ஒரு நாகப்பாம்பு நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து பாம்பை லாவகமாக காரில் இருந்து வெளியே தள்ளினார்கள். வெளியே வந்த பாம்பு படம் எடுத்து சீறியது. அதைத்தொடர்ந்து பாம்பினை கம்பால் அடித்து கொன்றார்கள். பின்னர் காரில் வந்தவர்கள் நிம்மதியாக புறப்பட்டு உறவினரின் இறுதிச்சடங்குக்கு சென்றார்கள்.

ஓடும் காரில் இருந்து பாம்பு பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story