அனிதா மரணத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பொய் பிரசாரம் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
அனிதா மரணத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடைபெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பூந்தமல்லி,
அனிதா மரணத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடைபெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுசென்னை வானகரத்தில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகள் திருமணத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். பிரதமர் உருவபொம்மையை அவமதித்ததை காவல்துறை கண்டிக்கவில்லை. நீட் தேர்வுக்கும், பிரதமருக்கும் தொடர்பு இல்லை. நீதிமன்ற உத்தரவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொய் பிரசாரம்மருத்துவ கல்வியில் கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்தவர்களும் தமிழக மாணவர்கள் தான். பா.ஜனதா கட்சிக்கு எதிராக இந்த பிரச்சினையில் தி.மு.க. உள்பட பல கட்சிகள் அரசியல் செய்கிறது.
மாணவி அனிதா விவசாயம் சார்ந்த படிப்பு படிக்கலாம் என இருந்தபோது, அவரது உறுதியை குலைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? தனியார் மருத்துவ கல்லூரிகள் இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ளன. பா.ஜனதா கட்சிக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்களை முறியடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.