வெம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றியவர் தீயில் கருகி சாவு


வெம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றியவர் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 4 Sept 2017 5:00 AM IST (Updated: 4 Sept 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

வெம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றியபோது எரியும் அடுப்பில் கேன் தவறி விழுந்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் கருகி பலியானார்.

வெம்பாக்கம்,

வெம்பாக்கம் அருகே உள்ள கீழ்நெல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ஸ்ரீகாந்த் (வயது 23), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர் வெளியே செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை எடுத்துள்ளார். அப்போது அதில் பெட்ரோல் இல்லை என தெரிந்தது. இதையடுத்து இரவு சுமார் 10 மணியளவில் ஒரு கேனில் பெட்ரோலை வாங்கி வந்தார். வீட்டின் வெளியே உள்ள அடுப்பின் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி அதில் கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி உள்ளார். அப்போது திடீரென பெட்ரோல் கேன், அருகில் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தவறி விழுந்தது.

அடுத்த வினாடியே ஸ்ரீகாந்த் மீதும் தீ பிடித்ததில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீகாந்த் இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீ விபத்தில் உயிரிழந்த ஸ்ரீகாந்த்துக்கு பிரியா என்ற மனைவியும், கவிநயா என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர்.


Related Tags :
Next Story