பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Sept 2017 4:15 AM IST (Updated: 5 Sept 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இதில் மொத்தம் 223 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், கலால் உதவி ஆணையர் மல்லிகா, தனித்துணை கலெக்டர் முத்தையன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திட்டத்தின் சார்பில் 8 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலை உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

Next Story