நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கிளை செயலாளர் இனியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் மதன், மாவட்ட துணை செயலாளர் கவிநிலவன், நிர்வாகிகள் பிரதாப், அஜ்மல், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும். மாணவி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கல்லூரி முன்பு திருவாரூர்-நாகை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல மன்னார்குடி அரசு ராஜகோபாலசாமி கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பின் நிர்வாகிகள் லோகேஷ், மணிகண்டன், ஜெயக்குமார், கலைச்செல்வன், விஜயகுமார், அஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப் பினர்.

Related Tags :
Next Story