கொசஸ்தலை ஆற்றில் ஆழ்குழாய் கிணறுகள் திட்டமிட்டபடி அமைக்கப்படும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தாலும் கொசஸ்தலை ஆறு மற்றும் பரவனாற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை,
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன, ஆனால் பருவ மழை பொய்த்து போனதாலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைக்காததாலும் ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் சேமிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது.
இதனால் சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டது. பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளும் தண்ணீர் வற்றி வரண்டு போகும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஏரிகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீர் மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சி பயன்படுத்தப்பட்டது.
இதுதவிர சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் ஏரிகளில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரியில் 27 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 25 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 110 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 205 மில்லியன் கன அடியும் என மொத்தம் 367 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 2.4 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது ஏரிகளில் தேங்கி உள்ள 367 மில்லியன் கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புறநகரில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 70 முதல் 80, மில்லியன் லிட்டர் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர போரூர் ஏரியில் இருந்து தினசரி 4 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யும் பணியும் நடந்து வருகிறது. தினசரி பல்வேறு வழிகள் மூலம் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது கொசஸ்தலை ஆறு மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரவனாற்றில் 15 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தாலும் திட்டமிட்டபடி ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான ஆயத்தபணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story