தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் கொடுத்த ‘கெடு’ இன்று முடிகிறது அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை
சட்டசபைக்குள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்த பிரச்சினை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு சபாநாயகர் கொடுத்த ‘கெடு’ இன்று (செவ்வாய்க்கிழமை) முடிகிறது.
சென்னை,
இதையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் தடையை மீறி குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி, தமிழக சட்டசபை கூட்டம் நடந்த போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவைக்குள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து கோஷம் எழுப்பினர்.
இதனை சபாநாயகர் தனபால் கண்டித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டசபைக்குள் எப்படி கொண்டு வந்தீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இது அவையின் உரிமையை மீறியதாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இந்த பிரச்சினை குறித்து அவை உரிமை குழு விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.
அவை உரிமை குழு கூட்டம் சமீபத்தில் கூடியது. இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. குழு அளித்த பரிந்துரையை ஏற்று சபாநாயகர் தனபால், அவையின் உரிமையை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 21 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார். தக்க விளக்கத்தை 5-ந்தேதிக்குள் (இன்று) தெரிவிக்கும்படி அந்த நோட்டீசில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.
சபாநாயகர் ப.தனபால் கொடுத்த ‘கெடு’ இன்று (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இதுவரையில் 21 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் கொடுக்காத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு என்ன பதில் அளிப்பது என்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
சபாநாயகரின் விளக்க நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் சந்தித்து பேசலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Tags :
Next Story