மோட்டார் சைக்கிளில் சென்றபோது கல்லூரி பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு டிரைவர் கைது
சங்ககிரி அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது கல்லூரி பஸ் மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஆனைக்கல்பாளையம் பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது மகன் ஆனந்த்(வயது16). சங்ககிரியில் உள்ள லாரி பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். இதே ஊரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோபி(19) குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்(சி.ஏ.) 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை அய்யனாரப்பனின் மோட்டார்சைக்கிளை கோபி ஓட்டிக் கொண்டு சங்ககிரி நோக்கி வந்து கொண்டு இருந்தார். மோட்டார்சைக்கிளின் பின்னால் ஆனந்த் உட்கார்ந்து இருந்தான். வழியில் சங்ககிரி அருகே எபினேசர் காலனி சமீபம் வந்தபோது எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ்சும், மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இதில் ஆனந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மாணவர் கோபி படு காயம் அடைந்தார். அப்போது சங்ககிரி அடுத்த கிடையூர்மேட்டூர் பகுதியை சேர்ந்த முத்துவேல்(30), அவரது மனைவி தாரணி(27), 3 வயது மகன் பிரணீத் ஆகியோருடன் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
இந்தசமயத்தில் விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் முத்துவேல் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் குழந்தை பிரணீத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபியும், குழந்தை பிரணீத்தும் சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மாணவர் கோபி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து குழந்தை பிரணீத் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவர் எடப்பாடி கோனேரிப்பட்டியை சேர்ந்த வெற்றிக்குமாரை(30) கைது செய்தனர்.

Related Tags :
Next Story