கோவில்பட்டி அரசு பள்ளிக்கூடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


கோவில்பட்டி அரசு பள்ளிக்கூடத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:23 AM IST (Updated: 5 Sept 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.25 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் 1,400 சதுர அடி பரப்பளவில் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ் கான், பொதுப்பணித்துறை கோட்ட உதவி பொறியாளர் முத்துலட்சுமி, தலைமை ஆசிரியர் முனியசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ், நிலவள வங்கி தலைவர் கணபதி பாண்டியன், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு கடைசி நிமிடம் வரையிலும் போராடியது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராக அமைந்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை ஏற்று, இனி தமிழக மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தமிழக அரசு தயார் செய்யும். வருகிற 12-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்றார்.

Next Story