சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2017 5:32 AM IST (Updated: 5 Sept 2017 5:32 AM IST)
t-max-icont-min-icon

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்வது பற்றி கேட்கிறீர்கள். ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் எந்த போராட்டமும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். சட்டத்தை மீறி யாரும் நடந்து கொள்ளக்கூடாது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளேன்.

எனக்கு எதிராக வருமான வரித்துறையில் தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். நான் வருமானத்தை விட அதிக சொத்துகளை சேர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நான் அவ்வாறு சொத்துகளை சேர்க்கவில்லை. பொய் புகார்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. புகார் குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்கட்டும். சிலர் பொய் புகார்களை கூறுவதையே தொழிலாக கொண்டு செயல்படுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story