வியாசர்பாடி அருகே ரெயில் மோதி மத்திய உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி


வியாசர்பாடி அருகே ரெயில் மோதி மத்திய உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடி அருகே ரெயில் மோதியதில் மத்திய உளவுத்துறை இன்ஸ்பெக்டர் பலியானார்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சுந்தரம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 56). இவர் நாமக்கல்லில் மத்திய உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏசுதாஸ் தனது மகளின் குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு நாமக்கல்லில் இருந்து சென்னை வந்தார்.

நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா முடிந்த பின் னர், தனது நண்பரை பார்க்க வியாசர்பாடியில் உள்ள கல்யாணபுரம் பகுதிக்கு சென்று வருவதாக மனைவி திலகவதியிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதற்கிடையே வியாசர்பாடி-பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்ட வாளத்தில் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்ப தாக பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்து.

அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தவர் ஏசுதாஸ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story