ஈரோட்டில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா தற்கொலை செய்ததற்கு மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா தற்கொலை செய்ததற்கு மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஈரோடு காந்திஜிரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கபிலன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story