நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி


நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 6 Sept 2017 4:45 AM IST (Updated: 6 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக மாணவர்களுக்கு சிறந்த கல்வியாளர்கள் மூலம் தமிழக மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோவை,

கோவையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகள் மற்றும் போட்டித்தேர்வுகளை தமிழக மாணவ–மாணவிகள் எதிர்கொள்ள இந்த அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன்ஒருபகுதியாக மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நமது பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவையும் இடம்பெறும்.

மேலும் மாணவ–மாணவிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்க தமிழகம் முழுவதும் 412 பயிற்சி அமைங்கள் அமைக்கப்பட உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு வெளி மாநிலங்களை சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் மூலம் மாணவ–மாணவிகளுக்கு காணோலி காட்சி மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதுதவிர 54 ஆயிரம் கேள்விகள், பதில்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பணி முடிந்ததும் இந்த மாத இறுதிக்குள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும். இந்த பணிகள் முடியும் போது இந்தியாவிலே சிறந்த மாணவர்களாக தமிழக மாணவர்கள் விளங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story