விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரதம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரதம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-06T03:13:26+05:30)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்செந்தூர்,

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரையிலும் சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், கல்வியை பொதுப்பட்டியிலில் இருந்து மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்ற வலியுறுத்தியும், தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகில் நேற்று காலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கி பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்யும் வரையிலும், இந்த போராட்டத்தை தொடருவோம், என்று தெரிவித்தார்.

மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி, மாவட்ட துணை செயலாளர் இந்திரா, மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயகொடி, மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப் பாளர் தமிழ்பரிதி, மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் விடுதலை செழியன், ஒன்றிய செயலாளர்கள் சங்க தமிழன் (திருச்செந்தூர்), தமிழ்வாணன் (உடன்குடி), நகர செயலாளர் உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story