நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி விபத்தில் பலி
நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி, அரசு போக்குவரத்து கழக மீட்பு வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி குலசேகரி. இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு செந்தில்முருகன், சாந்தகுமார் என்ற மகன்கள் உள்ளனர். செந்தில்முருகன் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சாந்தகுமார், கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று காலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற கிருஷ்ணனின் தாயாரை பார்க்க சென்றனர். இவர்கள் பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு போக்குவரத்துகழக மீட்பு வாகனம் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த குலசேகரியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குலசேகரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான கணவன்-மனைவி உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி முருகன், ரோகிணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story