மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஏத்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கருப்பன். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 36). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கீரனூர் அருகே உள்ள குளத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து தேவக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்ராயப்பன் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story