கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை விபசாரத்துக்கு அழைத்து மிரட்டி பணம் பறிப்பு: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதி உள்பட 4 பேர் கைது


கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை விபசாரத்துக்கு அழைத்து மிரட்டி பணம் பறிப்பு: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2017 3:38 AM IST (Updated: 6 Sept 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை விபசாரத்துக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்த பெண் உள்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் பேகூரை சேர்ந்த லதா(வயது 25), சிக்கபேகூரை சேர்ந்த பிரவீன்(24), ரூபேனஅக்ரஹாரத்தை சேர்ந்த ராகவேந்திரா(20), விராத் நகரை சேர்ந்த கிரண்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. திருமணம் முடிந்து கணவரை பிரிந்த லதா, பிரவீனுடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒங்கசந்திராவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், லதா கம்ப்யூட்டர் என்ஜினீயர்களிடம் நெருக்கமாக பழகி அவர்களை நண்பர்களாக்கி, பின்னர் அவர்களை விபசாரத்துக்கு அழைத்துள்ளார். இவ்வாறு விபசாரத்துக்கு வரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பிற பெண்களுடன் நெருக்கமாக இருக்கும்போது அதை லதா மற்றும் அவருடைய கும்பல் தங்களின் செல்போனில் படம் பிடித்துக் கொள்வார்கள்.

பின்னர் அவர்கள், அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயர்களிடம் இருந்து அதிகளவில் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது. இவ்வாறாக அவர்கள், 6 கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை ஏமாற்றி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story