கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
முன்விரோதம் காரணமாக கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் உதயகுமார் என்ற சுதா(வயது 30). இவருக்கும், முகாமில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி வசித்து வரும் பால்ராஜ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முகாமில் நடந்துச்சென்ற உதயகுமாரை, பால்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான பார்த்தீபன், சிவா, சீனு ஆகியோர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த உதயகுமார், சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பால்ராஜ் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story