வடசேரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வடசேரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
அரசு ரப்பர்தோட்டத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்தவேண்டும், தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தியும், குழு என்ற பெயரில் வெளி ஆட்களை ரப்பர் பால் வடிப்பில் ஈடுபடுத்துவதை கண்டித்தும், அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டமைப்பின் குமரி மாவட்ட கிளை சார்பில் வடசேரியில் உள்ள அரசுரப்பர் கழக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, பொதுச்செயலாளர் விஜயன் தலைமைதாங்கினார். மாநில இணைசெயலாளர் இளங்கோ, சிறப்பு தலைவர் ஞானதாஸ் உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.நகர செயலாளர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள் சிவனேசன், கிறிஸ்டோபர் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.