திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2017 10:30 PM GMT (Updated: 6 Sep 2017 8:25 PM GMT)

திண்டுக்கல் நாகல்நகரில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாகல்நகரில் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும், ஆட்டோ நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறி பணம் பறிப்பதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story