ஊத்தங்கரை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


ஊத்தங்கரை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 6 Sep 2017 10:45 PM GMT (Updated: 6 Sep 2017 9:49 PM GMT)

ஊத்தங்கரை அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலையை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகன் ராகுல் (வயது 6). இவன் வெள்ளிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக ராகுல் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் அப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story