ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிய நவீன கருவி கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிய நவீன கருவி வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் அதிநவீன கருவி நேற்று வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையினை 10 வினாடிகளில் கணக்கிடும் கருவி, முதல்-அமைச்சர் எடப்பாடி முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக மாவட்டத்தில் உள்ள 20 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் அதிநவீன 20 கருவிகள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் முதற்கட்டமாக வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 5 அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் ஒரு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கும் இந்த கருவி வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் மேற்கண்ட பரிசோதனை செய்ய மாவட்ட அளவில் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிகளிலும், சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கும் என 4 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
காய்ச்சலுக்கான காரணத்தினை கண்டறிய தற்போது மாவட்டத்திற்கு வழங்கியுள்ள கருவி உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொருத்துவதற்கான துறை வல்லுநர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். இவர்கள் இவற்றை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உடனடியாக பயிற்சி அளிக்கின்றனர்.
இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள் ரத்த அணுக்களின் எண்ணிக்கையினை கணக்கிடும் சோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரவேண்டிய சூழல் தவிக்கப்பட்டு, தங்கள் பகுதியிலேயே குறிப்பாக 10 வினாடிகளில் காய்ச்சலின் காரணத்தினை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி டாக்டர்கள் உடனடியாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் காய்ச்சல் தன்மை குறித்து தெரிந்து கொண்டு சிறப்பாக சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு விரைவான சிகிச்சையை அளிக்கும் வகையில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் அதிநவீன கருவிகள் மாவட்டத்திற்கு வழங்கிய முதல்- அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கருவியின் செயல்பாடு குறித்து சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கலெக்டர் ரோகிணி, துணை இயக்குனர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

Related Tags :
Next Story