மணக்குள விநாயகர் கல்வி நிறுவனர் கேசவன் நினைவு நாள் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்
புதுவை ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி நிறுவன நிறுவனரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான கேசவனின் 6–ம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி,
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன் எம்.எல்.ஏ.செயலாளர் நாராயணசாமி கேசவன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், டீன் காக்னே, (அகாடமி) டீன் கார்த்திகேயன், ஆராய் ச்சித்துறை டீன் அமோல் டாங்கரே, மருத்துவமனை கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, துணை கண்காணிப்பாளர் கிரிஜா, பிரகாஷ், மண க்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி, மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண், மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காஞ்சனா, செவிலியர் கல்லூரி முதல்வர் தனுசு, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி முதல்வர் நளினி ராஜகோவிந்தன் மற்றும் பேராசிரியர்கள், ட £க்டர்கள், மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவனர் கேசவன் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.