வண்டலூரில் மின்சாரம் தாக்கி வெல்டர் பலி


வண்டலூரில் மின்சாரம் தாக்கி வெல்டர் பலி
x
தினத்தந்தி 7 Sept 2017 4:46 AM IST (Updated: 7 Sept 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 36).

வண்டலூர்,

வெல்டரான இவர், நேற்று முன்தினம் வண்டலூர் பாலாஜி நகரில் உள்ள தட்சிணாமூர்த்தி என்பவரின் வீட்டில் 2–வது மாடியில் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது இரும்பு ராடை தூக்கிய போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் இரும்பு ராடு உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கண்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே உள்ள கடம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (32). கடந்த 27–ந் தேதி பெய்த மழையில் வீட்டின் அருகில் உள்ள மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக கை உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story