பள்ளிப்பட்டு அருகே கிராமத்துக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம் மேற்கு செதுலூர் கிராமம் அருகே மலைப்பகுதி உள்ளது.
பள்ளிப்பட்டு,
நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த மலைப்பகுதியில் இருந்து 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது.
அந்த நேரத்தில் வயலுக்கு சென்ற சிலர், மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் கூச்சல் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்தனர். சாலையோரம் கிடந்த அந்த மலைப்பாம்பை ஒரு முதியவர் லாவகமாக பிடித்தார். அவருடன் சேர்ந்து வாலிபர்களும் அந்த மலைப்பாம்பை பிடித்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி போட்டனர்.
இதுகுறித்து பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை மீட்டு புல்லூர் காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story