கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு


கோவை  சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Sept 2017 2:20 PM IST (Updated: 7 Sept 2017 2:20 PM IST)
t-max-icont-min-icon

கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது இதில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவை

கோவை சூலூர் அருகே  உள்ள சோமனூரில் பஸ் நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக  பஸ் நிலைய மேற்கூரை  விரிசல் காணப்பட்டது. இந்த  நிலையில் இன்று மதியம்  பஸ்நிலையத்தில் அதிகமான பயணிகள் காத்து  இருந்தனர். அப்போது  நகர பஸ் ஒன்று மேர்கூடைமீது மோதியது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியானார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் அதிகமான பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அருகில்  உள்ள கோவை திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைக்கும் படைகள் வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story