மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் பெங்களூரு பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது


மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் பெங்களூரு பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த எம்.ஜி.எழிலரசன்-சவுந்தரி தம்பதியின் மகன் சந்தோஷ்குமார் (வயது 12).

சென்னை,

 இவன் தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் கடந்த 1-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் கடந்த 5-ந்தேதி அவன் மூளைச்சாவு அடைந்தான். இதையடுத்து அவனது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர்.

இதன்மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெங்களூருவை சேர்ந்த 46 வயதான பெண்ணுக்கு, சிறுவனின் சிறுநீரகத்தை டாக்டர் நடராஜன் குழுவினர் பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம் மற்றும் இதயம், கல்லீரல் போன்றவை மற்ற மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்த தானமாக வழங்கப்பட்டது. சிறுவனின் உறுப்புகள் தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story