குடிநீர் வாரிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
கொடுங்கையூரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
பெரம்பூர்,
சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் கொடுங்கையூரில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னையை சேர்ந்த மகேந்திரன் காண்டிராக்ட் எடுத்து உள்ளார். அவரிடம் இருந்து கொளத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் துணை காண்டிராக்ட் எடுத்து பணிகளை செய்து வந்தார்.
இந்த பணியில் சேலத்தை சேர்ந்த பெரியசாமி (வயது40) தனது மனைவியுடன் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கொடுங்கையூர் எழில் நகர் காமராஜர் சாலையில் குழாய் பதிக்கும் பணியில் பெரியசாமி ஈடுபட்டார்.
அப்போது பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால், மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைக்க அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து அனுமதி இல்லாமல் பெரியசாமி கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து மோட்டாரை இயக்கியதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் விரைந்து சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
மின் கம்பத்தில் இருந்து அனுமதி இல்லாமல் மின்சாரம் எடுத்தது தொடர்பாக துணை காண்டிராக்டர் சுரேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனமுடைந்த கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாத்திமா (19) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பிரசாந்த் (23) கைது செய்யப்பட்டார்.
* புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக காசிமேட்டில், ரமேஷ் (42) என்பவரும், புளியந்தோப்பில் தணிகைவேல் (34), மல்லிகா (38) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரமேஷிடம் இருந்து 87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகே உள்ள மனோஜ் (35) என்பவரது செல்போன் கடையில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
* தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜ்குமாரின் மோட்டார்சைக்கிளை திருடியதாக, குமரேசன் (21), முகமது நிசாம் (20), சாகுல் அமீது (24), செய்யது இப்ராகீம் (20) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள்களை மீட்டனர்.
* வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
* சென்னை எழிலகம் வளாகத்தில் நேற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு பாம்பு வந்தது. இதனால் அங்கிருந்த பெண் போலீசார் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டது.
* மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், மத்திய அரசை கண்டித்தும் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்த அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
* அடிப்படை வசதிகள் கேட்டு பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள தேசிய பார்வையற்றோர் பயிற்சி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* தியாகராயநகரில் உள்ள ஒரு பொம்மைக்கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து ரூ.45 ஆயிரத்தை திருடிச்சென்ற சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story