மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் பலி
ராசிபுரம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி, எலக்ட்ரீசியன். இவரது மனைவி மைதிலி. இவர்களது மகன் லோககிரி (வயது 7). கடந்த 5 நாட்களாக சிறுவன் லோககிரி மர்ம காய்ச்சல் காரணமாக ராசிபுரம் மற்றும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட லோககிரி நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.
அதேபோல் ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாமணி (40) என்ற பெண் மர்ம காய்ச்சலுக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலன் அளிக்காமல் பாலாமணி பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story