கோவையில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 676 பேர் கைது
கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 676 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், புதிய ஊதியம் நிர்ணயிப்பதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் அரசு ஊழியர்களும், 5 ஆயிரம் ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள். இந்த வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம், உயர்நிலை,மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், வட்டார வள மைய பயிற்றுனர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்பட 7 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆண், பெண் அரசு ஊழியர்கள் நேற்று காலை 10 மணியளவில் கூடினார்கள். அதன்பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். மறியலுக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ஸ்டேட் பாங்க் சாலையின் ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். மற்றொரு பக்கம் போக்குவரத்து நடைபெற்றது. இதனால் செஞ்சிலுவை சங்கத்திலிருந்து ரெயில் நிலையம் செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
அதன்பிறகு மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் பஸ்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்று அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கோவை மாநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 326 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 6 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட 2 ஆயிரத்து 350 பேரை போலீசார் கைது செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்
கோவை மாநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியலில் ஆயிரத்து 326 பேரும், புறநகரில் நடந்த மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்து 350 பேரும் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 676 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோவை கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் உயர் அதிகாரிகள் வெளியிடங்களுக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ள செல்லவில்லை.
கோவை மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்தம் நடக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை (சனிக்கிழமை) பேசி முடிவு செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story