குளத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு
குளத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரை அடுத்த வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி(வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி(55). இவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
நேற்று காலையில் வழக்கம்போல் சுப்புலட்சுமி தேசிய ஊரக வேலைக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள காட்டு பகுதியில் தேசிய ஊரக தொழிலாளர்கள் வேலை செய்தபோது, பலத்த இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. உடனே சுப்புலட்சுமி உள்ளிட்ட தொழிலாளர்கள் அங்குள்ள சீமை கருவேல மரங்களின் அடியில் ஒதுங்கி நின்றனர்.
அப்போது சுப்புலட்சுமியின் மீது திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், மற்றொரு வாகனத்தில் சுப்புலட்சுமியை ஏற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியில் எதிரே 108 ஆம்புலன்ஸ் வந்ததால் சுப்புலட்மியை அதில் ஏற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுப்புலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story